Sunday, February 20, 2011

பிரபாகரன் தாயே! பார்வதியே! தாலேலோ!

இனிய குடும்பத்தில் ஒரு நொடிந்த சமூகம் எட்டிப் பார்த்தால்?
சமூகத்தை, உதய சூரியக் குடும்பமே எட்டிப் பார்க்கலாம்!
ஆனால் ஒரு குடும்பத்துக்குள் சமூகம் எட்டிப் பார்த்தால்? = உன் கதி தான்! நிர்க் கதி தான்!

பிள்ளையோ போராளி!
கணவரோ உழைப்பாளி!
இருவருக்கும் இடையே
பெண்ணோ பெரும் தவிப்பாளி!


ஈழத்தில் தொலைத்த முகவரிகளை
இதர கண்டங்களிலாச்சும் கண்ட எம் மக்கள்!
முகத்தில் தொலைந்த முக வரிகளை
இவள் எந்தக் கண்டத்திலும் காணாது போனாளே!

விமானத்தில் வந்து இறங்கியது எங்களுக்குத் தெரியவே தெரியாது,
SpiceJet விமானத்து வர்த்தகங்கள் மட்டுமே பேசிடத் தெரியும்!

இறங்காது போனதற்கு இரங்கற்பா!
இருக்கவே இருக்கிறது இன்தமிழ்!
நீங்களா நம்பி வந்தீங்க-அது "ஒருதலை"!
அதற்கு நாங்கள் தரமுடியுமா ஆறுதலை?

தாயே, இந்தப் பாவத்துக்கு நாங்கள் மெளன சாட்சிகள்!
மண்ணுக்குள் போகும் முன்
எங்களை மன்னித்து விடு அம்மா!
எங்களின் தமிழ், கண்ணகிக்கு அல்ல! அவள் சிலைக்கு மட்டுமே!!




மகனுக்கு நீ தாய் இல்லை
மணாளன் அருகில் இல்லை
பெற்ற மக்கள்....இருந்தும் இல்லை
ஊர்ப் பழி ஏற்றாய் அம்மா - பார்வதீ
உன் பழி கொண்டோம் அம்மா!
உன் பழி கொண்டோம் அம்மா!

புருஷன் அறியாது பிள்ளைக்குச் சோறிட்டாய் - கண்ணுறங்கு!
பிள்ளையின் திருமணத்துக்கு நீ வரவில்லை - கண்ணுறங்கு!
வீடின்றி போனாலும் நாடின்றிப் போகாதென
நம்பியே காடின்றிப் போவாயோ கண்ணுறங்கு!

பிள்ளையே ஒளிந்திருக்க, முகாமுக்கு வந்தனையோ?
பிள்ளையின் சவத்துக்கு, உன் டி.என்.ஏ தந்தனையோ?
எங்கு சென்றும் உன்னை ஏலாது, ஈழமே சென்றனையோ?
தாய் மடியில் தாயாக, தாயே நீ கண்ணுறங்கு!

அஞ்சுகத் தாய் போலுனக்கு அதிர்ஷ்டம் இல்லை என்றாலும்
தமிழ்த் தாயின் கையிருக்கு, வருடிவிடத் தாலேலோ!
உன்னை மறுதலித்தார் எத்திவிட்டார், என்பதை நீ மறந்து விடு
தமிழுக்குச் சாபமிடா ஈழத் தாயவளே தாலேலோ!

சீகாழிக் குளக்கரையில் பார்வதியின் ஞானப் பால்
ஈழத்தின் கரையினிலே பார்வதிக்கு? கள்ளியிலும் பால்?

கண்ணன் அவன் மயிலிறகால் கண்வருடத் தாலேலோ!
முருகன் அவன் முத்தமிழால் தாலாட்டத் தாலேலோ!
கேள்விகள் ஏதுமின்றி, பேதையே நீ தாலேலோ!
கேள்விகள் எங்களுக்கே, பார்வதியே தாலேலோ!


கடந்த கால் பரந்த காவிரிக் கரை குடந்தையுள்,
ஆரா அமுதப் பெருமாளுக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு,
சொந்த பந்தம் யாரும் இன்றி, இயற்கை எய்திய ஒரு தொண்டனுக்கு...

இன்றளவும் ஈர ஆடை புனைந்து, நீத்தார் கடன் அளிக்கும் இறைவனே,
இவள் கடனையும் நீயே தீர்த்து வைக்குமாறு...
எம்பெருமானைத் தாழ்மையுடன் இறைஞ்சுகிறேன், இவளின் மறுதலிக்கப்பட்ட மனநிலையை எண்ணிப் பார்க்கவும் சக்தியற்ற அடியேன்.....

Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP